Wednesday, August 9, 2017

அந்த போன்ல அப்படி என்னதான் இருக்கோ !!!

உங்களுக்கு 40 வயசுக்கும் குறைவுன்னா இந்த postடோட டைட்டில உங்க அம்மா , அப்பா, தாத்தா, பாட்டி அட்லீஸ்ட் உங்க மூதாதயர்களில் ஒருவர் இந்த கேள்விய கேட்டு இருக்கக்கூடும் . அப்படி என்னதான் இருக்கு ?
.
இதுல ரெண்டு வகை இருக்கு . ஆண்களின் கைபேசி, பெண்களின் கைபேசி . இந்த iPhone யூசர்களுக்கு அவங்க போன்ல என்னத்த அப்படி இருக்கும் அவங்களுக்கே தெரியாது . அடிச்சு கேட்டா கூட சொல்ல மாட்டாங்க . கேட்டா செவன்டி தவுசண்டு ஒன்லி ஆப்டர் GSTம்பானுக. மத்த போன அதோட தோற்றத்தை வைத்து அது பையன் போனா இல்ல பொண்ணு போனான்னு சொல்லிடலாம். பட் நம்ம iPhone ல போனுக்கு ஒரு ஸ்டீல் கோட்டிங் இருக்கும் . அதுக்கு மேல ஒரு கவர் அந்த கவர கவர் பன்ன ஒரு கவர்ன்னு "மோடியோட அச்சே தின்" மாதிரி பில்டப்பு பட்டையைக் கிளப்பும் . பட் அட் த என்ட் ஆப் தி டே கிழியப் போறது என்னமோ நம்ம டவுசர்தான்.

சரி நம்ம மிடில் கிளாஸ் போனுக்கு வருவோம். பத்தாயிரம் ரூபாய் தான் இருக்கும் பட் நம்ம ஐபோன விட பெட்டரா ஒரு போன் வேணும்ன்னு கடைக்காரன தற்கொலைக்குத் தூண்டி கடைசியா ஒரு போன வாங்கி , அதுல பேஸ்புக் ,  வாட்ஸாப், மெசஞ்சர் , லொட்டு லொசுக்குன்னு இன்ஸ்டால் பண்ணி நம்ம சோசியல் ஸ்டேட்டச டெவலப் பண்ணலாம்னு ஒக்காந்தா , நமக்கு பிரசர், டிப்ரசன், இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் (தாழ்வு மனப்பான்மை) அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வந்துரும்.

பர்ஸ்ட் பேஸ்புக் .
கல்யாணம் , குழந்தைப் பேறு , பட்டம் பெறுதல் , வாகனம் வாங்குதல் , நிச்சயம் ,  தேன்நிலவு , பிறன் மனை நோக்க , பிறன் காதலி நோக்க , வாழ்வில் சாதித்ததை (வேலைக்குப் போய் சம்பளம் வாங்கிருப்பாப்ல),  திரைப்படம் காண்பதை உலகினிற்க்கு எடுத்துக்கூற , தன் சாதி வெறியை பெருமையாய் பறைசாற்ற , தன் சொந்த சகோதரனை விட தான் பண பலத்தில் பிஸ்தா என்பதை தனக்குத் தானே கூறிக்கொள்ள பயன்படுவதே இப்பேஸ்புக் .

நெக்ஸ்டு வாட்ஸாப் .
நம்ம சொந்த சித்தில ஆரம்பிச்சு மோடி வரைக்கும் கான்டாக்ட் லிஸ்டுல இருப்பாய்ங்க. நமக்கு ரிசல்ட்டு வர்ற அன்னிக்கு , நம்ம லவ்வு மேட்டர் வீட்ல தெரிஞ்சு நம்மல கொத்து புரோட்டா போட்ட அன்னிக்கு , நமக்கு வேலை போன அன்னிக்கு , இந்த மாதிரி நம்மல பிரியாணி போடுற அன்னிக்கு மட்டுமே மெசேஜ் பன்னுவாங்க.

அடுத்து வாட்ஸாப் குரூப்பு .
ஸ்கூல் நண்பர்கள் , கல்லுரி , அலுவலகம் , வாக்கிங் குரூப்பு , மூனாவதுல கவிதாவ லவ் பண்ணவுங்க எல்லாம் சேந்து ஒரு குரூப்பு ஓடுது , மெட்ராஸ் வெள்ளம் குரூப்பு , ஜல்லிக்கட்டு குரூப்பு , பிக் பாஸ் troll குரூப்புன்னு லிஸ்ட் பெருசு .

போன்ல உருப்படியா எதும் பண்ணல . எல்லாருக்கும் தனியா ஆயிடுவோமோன்னு ஒரு பயம் . நேர்ல போய் பார்த்து பேசிக்கறது எல்லாம வழக்கொழிஞ்சி போயிடிச்சு. தனிமையில் இருந்து தப்ப , தப்புதப்பா கைபேசிய பயன்படுத்திகிட்டடு இருக்கோம்.
நேர்ல நிறையா கேள்வி வருது . நீ ஏன் இன்னும் வேலைக்குப் போல , அந்த பையனோட ஒனக்கு என்ன பேச்சு ? இன்னும் கொழந்தை இல்லையா ? கல்யாணம் பன்னாம ஒன்னா இருக்கீங்களா ? நீங்க என்ன ஜாதி ?

சக மனுஷனுக்கு அன்ப குடுக்கல அவன வாழ்வின் மேல் வெறுப்பு கொண்டு சுய கழிவிரக்கம் கொள்ள வைத்து.....
போதுங்க .
கொஞ்சம் சிரிப்போம் !
தோள் தட்டிக் கொடுப்போம்!
பாவம் அவனும் மனிதனாய் பிறந்துவிட்டான்.
ரௌத்திரம் பழகி விட்டோம்.
அன்பு பழகுவோம்.
அன்புடன் ,
அரவிந்த் . 

No comments:

Post a Comment