Wednesday, June 21, 2017

ஒரு வெளம்பரம்

இப்பலாம் தமிழ்ல எழுதனும்னா ரெண்டு type தான் இருக்கு. ஒன்னு ஒடுக்கப்பட்டவரின் குரலாக இருக்கனும் (அவங்க கஷ்டத்தை எழுதினவன் எல்லாம் அவர்களின் வாழ்வுரிமைக்காக பாடுபட்டு தியாகம் பண்ணுவாங்க என்று நினைத்தால் நிர்வாகம் பொறுப்பல்ல) இன்னொன்னு நகைச்சுவை. காதல் பத்தி எழுதினா டீன்ஏஜ் பசங்க கூட படிக்க மாட்டாங்க . இந்த பேஸ்புக் வந்தாலும் வந்துச்சு , நான் கூட எழுத ஆரம்பிச்சுட்டேன்.



சினிமா, அரசியல் , கிரிக்கெட் , மீம்ஸ தவிர என்ன எழுதலாம்? நம்ம வாழ்க்கையில் எதுவும் நடக்க மாட்டிக்குது அப்புரம் என்னத்த நகைச்சுவை நிகழ்வு ?  இப்போ புதுசா "வாண்டர் லஸ்ட்" (wander lust) அப்படின்னு ஒரு குரூப் கிளம்பி இருக்கு. அதாவது ஒரு படத்துல சித்தார்த் ஒரு சின்ன பையன உலக உருண்டைல கை வைக்க சொல்லுவாப்ல, அந்த பையன் கை வைக்கிற நாட்டுக்கு போவார் என்று படம் முடியும். (இத படிக்கும் போது பாரத பிரதமர் நினைவில் வந்து போனால் கம்பேனி not responsible) இது தான் வாண்டர் லஸ்ட். பிடித்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் சென்று தன்னைத் தொலைத்து வாழ்வைத் தேடுதலே இந்த வாண்டர் லஸ்ட் நோக்கம்.

கழுத நம்ம  இந்த மாச EMI எப்படி கட்டுறது என்று இல்லாத மூளையை கசக்கும் போது வந்து நிக்கும் நம்ம நண்பனோட fb நோட்டிபிகேசன் .
நம்ம வயதில் நம்மை விட சுமாராக படித்தவன் நம்ம கேள்வியே படாத ஊர்ல , ஏதோ மதுரை கோனார் கடைல புரோட்டா சாப்புடுர மாதிரி , வாய்ல நொழையாத பெயர் கொண்ட ஒரு டிஷ் சாப்பிட்டு, அத ஒலகத்துக்கே சொல்லும்போது நமக்கு ஏற்படும் மனநிலை தான் கையறுநிலை எனப்படும்.
(வருசா வருசம் வர்ற +2 மார்க்க பாத்துட்டு எங்க அம்மா என்னை வருசா வருசம் திட்டும் , just some personal info).

நம்ம அறிவுக்கு எட்டுன வரைக்கும் , அவன்/ அவள் அவங்க சோல் மேட் கூட தான் இந்த டிரிப்பு போயிருப்பாங்க . திருமணம் ஆன பின்பா இல்லை நட்பு சகிதமா போனாங்கலா என்பது அவர்களின் fb dp  காட்டி கொடுத்து விடும். தி.பி. என்றால் அவர்களை அன்-பிரண்ட் அல்லது அன்-பாலோ செய்வது நம் கனையத்திற்கு செய்யும் நன்மை . தி.மு. என்றால் அவங்க அடுத்த பாஸ்வேர்ட் நமக்கு தெரியும் என்பதை புரிந்து கொள்ளவும்.

 இப்படி பட்ட போஸ்டு எல்லாத்தையும் பாத்து கடுப்பாகி டிவி-ய போட்டா
1 . நாளை உலக யோகா தினம் ( யார் சொன்னா? அவரே சொன்னார்)
2. விஜயின் பிறந்த நாள் வாழ்தை ஒரு நாள் முன்னரே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் தனுஷ்.
3. கும்ளே அவர்களை அவமான்ப்படுத்தினாரா கோலி? Telex தொலைக்காட்ச்சியில் பரபரப்பு விவாதம்.
4. ஆட்ட வெட்டலாம் மாட்ட வெட்ட கூடாதா? கேப்டன் கேள்வி (இதானா சார் உங்க டக்கு?)

எனக்கு ஆத்திரங்கள் வருது மக்கழே!

எவன் எப்படி போனால் என்க்கு என்ன ? நான் மற்றவர்களின் பதிவுகளை பார்பது இல்லை என்னும் அன்பர்களுக்கு ஒரு கேள்வி .. அப்புறம் என்ன கூந்தலுக்கு  fb-ல ஆக்டிவா இருக்கீங்க ?
அப்புறம் எப்ப dp  மாத்தரதா ஐடியா ?

அன்புடன்,
அரவிந்த் 

2 comments: