Friday, June 16, 2017

கவர்னரின் ஹெலிகாப்டர் by எஸ்.கே.பி. கருணா - புத்தக விமர்சனம்

ஒரு கல்லூரியின் தாளாளர்ன்னு சொன்னா மனசுல என்னலாம் தோனுமோ, அதுக்கு நேர்மாமாறாக இருக்கார் நம்ம கருணா. தமிழ் இலக்கியத்தில் இப்புத்தகம் செய்த நன்மைகள் யாவைன்னு கேள்வி கேட்டா "ஒரு சுக்கும் இல்லை" அப்படின்னு தான் பதில் வரும். வாழ்கையில நடந்த, நடக்கும் சம்பவத்தை எப்படி புனைவாக மாற்றுவது என்று கருணா அவர்கள் ஒரு crash-course எடுத்தா நல்லா இருக்கும்..



கடகடன்னு போற புத்தகத்தின் விமர்சனம் மந்தமாக போனா நல்லா இருக்காது.

கதைக்களம் :
இவர் நம்ம modern day எழுத்தாளர் என்பதால், இந்தப் புத்தகம் ஒரு கட்டுரை தொகுப்பு இல்லை கதைக் கதம்பம் என்று சொல்லலாம்.

கவர்னரின் ஹெலிகாப்டர் திடீர்ன்னு ரிப்பேர் ஆயிடுச்சு.
ராக்கெட் பார்ட் ஒன்னு வயல்ல விழுந்துருச்சு.
சிலோன் ஜனாதிபதி கிட்ட ஒரு சின்னப்பைபையன் ஹாய் சொல்ரான்.
சுஜாதா ரசிகனின் ரசனை.
மதுரை வீரன் செஞ்ச ஹெல்ப்.
விடுதலைப்புபுலிகளின் வாழ்க்கை.
கம்ப்யூட்டர் லேப் கலோபரம்.
பிரியாணியும் சைக்கிளும்.
பால்ய காலம். ... இன்னபிற..

அ.முத்துலிங்கம் அவர்களுடைய டிஸ்கிரிப்ஷன் இது "துயரம், அவலம், கருணை, அன்பு, சிரிப்பு எனப் பல்வேறு சுவைகளை எழுப்பும் தொகுப்பு இது"

நம்மலாம் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கருணா வாழ்ந்து விடுகிறார்.
என் தமிழ் வாசிப்பு கொஞ்சம் கம்மி.
சுஜாதா , சுகா , ராஜுமுருகன், கொஞ்சம் மதன் , ஆதவன் எல்லாம் படிச்ச மாதிரி ஒரு feel வருது.

எஸ்.கே.பி. கருணா சார் ... மாஸ் பண்ணிடிங்க. வேற லெவல்.
எல்லரும் படிச்சி பாருங்க.. சந்தோஷக் கண்ணீர்த்துளி கட்டாயம்.
அன்புடன் ,
Arvi . 

No comments:

Post a Comment