Sunday, July 16, 2017

யாதுமாகி நின்ற பொழுதுகள்

சமிப காலங்களில் என்னை நானே மாடர்ன் டே மதர் தெரசாவாக எண்ணிக்கொண்டு அனைவருக்கும் உதவும் செயலைச் செய்து வருகிறேன் .

அவர்கள் முகத்தில் சிரிப்பைக்காண சற்றே முயற்சி செய்தேன் ..
இப்பலாம் உதவி செய்வது நம்மோட கடமை மாதிரியும் அதையும்  பர்பெக்ட்டாக செய்யனும்னு எதிர்பார்க்கப்படுகிறது ..(உங்கள யூகம் சரியே ! அப்பப்போ நாடோடிகள் சசிகுமாராக என்னை நானே நினைத்துக்கொண்டு கிறுக்குத்தனம் செய்ய ஆரம்பித்து விட்டேன் ).
என்னப்போல ஒரு சிலர் சுற்றிக்கோண்டு இருப்பதைப் பார்த்து மனம் கசிந்து இதை எழுதுகிறேன்.
1 . நாம இல்லைன்னாலும் எல்லாம் நடக்கத்தான் போகிறது.
2 . நாம உதவலைன்னா யார் செய்வா என்று போகும் நபர்களைத்தான் குனியவைத்து குத்துவார்கள்.
3. நமக்கு ஒன்னுன்னா நாளைக்கு இவங்க தான் வந்து நிற்பார்கள் என்ற எண்ணத்தில் செய்கிறீர்களா ? சத்தியமா வரமாட்டார்கள்.
4 . உதவி செஞ்சுட்டு ஏன்டா செய்தோம் என்று வருந்தும் அளவிற்குத்தான் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா ? ஜாயின் தி கிளப் !
5. உங்கள் வேலையை விட்டுவிட்டு , ஓடிச் சென்று உதவாதீர்கள் . நமக்கு வேலையே இல்லை என்று முத்திரை குத்தி விடுவார்கள்.
அப்போ நம்ம உதவி செய்யவே கூடாதான்னு கேள்வி எழுகிறதா ?
"பாத்திரம் அறிந்து உதவுதல்" அப்படின்ற கொள்கையை பின்பற்றுங்கள்.
இந்த ஈகை , உதவி செய்தல் , பிறர் துன்பத்தை தன் துன்பமெனக் கருதி ஓடுவது , இதெல்லாம் மிகச்  சிறந்த பண்புகள் . வாழ்க்கை முழுக்க கொண்டு செல்ல வேண்டிய பொக்கிஷம்.
தவறான முறையில் நடத்தப்பட்டு உதவி செய்யும் வழக்கத்தையே விட்ட பலர் இன்று நம்முடன் இருக்கிறார்கள்.
கல்நெஞ்சம் கொண்டவர்கள் பிறப்பதில்லை,  உருவாக்கப்படுகிறார்கள்.
"அன்புடை நெஞ்சம் " அப்படின்ற தலைப்பில் கவிதை எழுத இருந்த என்னை நண்பன் கார்த்திக்கின் சொற்கள் மாற்றி எழுத வைத்தது.
"இப்படியே எல்லாருக்கும் ஓடி ஓடிப் போய் வேலை செய் , அப்புறம் உன்னை நாய் மாதிரி தான் நடத்துவார்கள்" .
ஒரு ஆங்கிலப் பழமொழி..
"அனைவருக்கும் நான் கதவைத் தாங்கிப்பிடித்தேன் உள்ளே சென்ற ஒருவர் கூட நன்றி சொல்லவில்லை"
"உன்னைய யார்ரா வாட்ச்மேன் வேலை பார்க்க சொன்னது?"
இந்த சினிமால வேணும்னா பிறர்க்கு உதவுதலே என் பிறவிப்பயன்னு வசனம் பேசலாம். நிஜ வாழ்க்கையில் சம்பாதிக்கனும் , சோறு சாப்பிடனும், EMI கட்டனும் , கொஞ்சம் சுய மரியாதை இருக்கனும்.
பாத்துச் செய்ங்க மக்கா .
அன்புடன்,
அரவிந்த் . 

No comments:

Post a Comment