Thursday, July 20, 2017

புத்தக விமர்சனம் - ஊர் சுற்றி . ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

தேசாந்திரி-ன்னு பேர் வைக்காம ஊர் சுற்றி-ன்னு பார்த்த உடனே பிடித்து விட்டது. இதுக்கு முன்னாடி இந்த களத்தில் படித்த புத்தகங்கள் அப்படின்னு பார்த்தா ஜிப்சி , ஏழாம் உலகம் , கோபல்ல கிராமம், இன்னபிற.


கதைக்களம்-  சீதாபதி என்னும் கிழவர் தன் வாழ்வை மீள் உருவாக்கம் செய்கிறார் . நம்ம யுவன் ஒரு உதவி இயக்குனர் . சினிமா எடுக்கப் போன ஊர்ல நம்ம கிழவரைப் பார்த்து, அவரிடம் கதை கேட்கிறார். மொத்தம் பன்னிரண்டு சந்திப்புகள். அவர் கூறிய கதைகளின் தொகுப்பே இந்த ஊர் சுற்றி.
இது வெறும் ஊர் பற்றின கதைகள் அல்ல. மனிதனைப் பற்றியது , அவனது மனதைப் பற்றியது. அவர்களின் சந்திப்புகளின் தொகுப்பே இப்புதினம்.

சில கதைகளில் அன்பு , சில கதைகளில் சோகம் ,  காதல் , பரிதாபம் , தாழ்வு மனப்பான்மை , பற்றற்ற நிலை , காமம் , பெண்களின் வாழ்வு , இன்னபிற .

புத்தகம் முழுக்க சாமான்ய மனிதனின் பார்வையைப் பதிய விட்டிருப்பது மகிழ்ச்சி.
சில கதைகள் முடிந்த பின்னரும் போயிகிட்டே இருக்கு.
சில கதைகள் மனதைவிட்டு நீங்காது .
சில கதைகள் ஒரு சோக சிரிப்பை தரும்.
சில கதைகள் சந்தோஷக் கண்ணீர் துளி.
சில கதைகள் புதையுண்ட நினைவுகளை அப்படியே போற போக்குல "ச்சூ" ன்னு சொல்லிட்டு போகுது, நம்ம மனசு மைன்ட் வாய்ஸ் " நான் சுகர் பேஷன்ட்டுடா என்னை விட்டுடுங்க"ன்னு அழுகும்.
ரொம்ப ஆஹா ஓஹோ இல்லை .
நம்ம போகாத பாதை . கிடைக்காத அனுபவங்கள்.
முடித்த உடன் மனம் சற்று கனத்துப்போகும்.
3.5/5 .
அன்புடன் ,
Arvi

3 comments:

  1. Can you please share buyable link from any publishers please.

    ReplyDelete
  2. http://www.noolulagam.com/
    You can find all of the Tamil books in this website . I myself have bought a couple of books from them . Trustworthy . All the best .

    ReplyDelete
  3. Thanks Aravind Sethuraman. I will check it out.

    ReplyDelete