நமக்கு இந்த சாதி மேல ஏன்னு தெரியாம ஒரு கோவம் எப்பவுமே இருக்கும்.பெரியார் பிறந்த ஊர்க்காரன் அப்படிங்கறதுனால இல்லை. இப்போ அப்படி கோவம் கொள்ள வைத்த விஷயம் இந்த "மேட்ரிமோனி" விளம்பரம் . "கொங்கு மேட்ரிமோனி" , "நாடார் மேட்ரிமோனி" , "முஸ்லிம் மேட்ரிமோனி". இந்த விளம்பரம் எடுத்தவர் மேல கோவம் இல்ல, அவருக்கு ஆதரவு பெருகப் பெருக தான தனித் தனி சாதிக்கு ஒரு வெப்சைட் தொடங்கி இருப்பாங்க ?
சரி நம்ம கதைக்கு வருவோம்.இப்ப இருக்கற இளைய தலைமுறை பெத்தவங்களை காரணம் காட்டி சாதியை ஆதரிக்கின்றனர். அப்புறம் எதுக்குடா அவ்வளவு படிக்கிறீங்க ? புத்தக திருவிழா-ல பாரதியார் புக்கு வாங்கி படிச்சிட்டு "பாரதி எந்த சாதின்னு?" கேப்பாங்க போல.
ஒரு பொறியியல் கல்லூரி . (ஆண்டு 2016)
மாணவன் : ஐ லவ் யூ
மாணவி : "நான் ****" (சாதியின் பெயர்)
மாணவன் : ஒலகத்துல "ஐ லவ் யூ"க்கு இப்படிப்பட்ட ரெஸ்பான்ஸ் எங்கயும் கிடைக்கல
வெளிநாட்டில் பணிபுரியும் தோழியுடன் பேசிக்கொண்டு இருந்தேன் .
Me : என்னது நீங்க ரெண்டு பேரும் பிரேக் அப்பாஆஆஆஆ ?
She : ஆமாடா .
Me : ஏன் ? எதுக்கு ?
She : வீட்ல பிரச்சினை .
Me : என்ன பிரச்சினை ?
She : ஜாதி . எப்படி தெரியாத எடத்துல கட்டி கொடுக்கறது என்று அம்மா feel பன்றாங்க !
Me : நீ வேலை செய்ற கம்பேனி முதலாளி உங்கம்மா கூட படிச்சவனா ? அவன நம்பி அந்த நாட்டுக்கு போலாம் ? ஆனா தெரியாத ஜாதி பையன் வேண்டாம் .. nice .
இப்ப எல்லாம் கல்யாணத்துக்கு ரெண்டு பத்திரிக்கை . சாதி பெயர் போடாமல் நண்பர்களுக்கு "friends invitation" சாதி பெயர் , அதுல சப் டிவிஷன் எல்லாம் போட்டு ஊருக்கு ஒரு பத்திரிக்கை .
இப்படி பண்ணும் போது நம்ம நாட்டுப்பற்று , மொழிப்பற்று , இதெல்லாம் சுக்கு நூறா போயிடுது. வெள்ளம் வந்தப்ப சோறு குடுத்தவன் சாதி பார்த்து சாப்டிங்களா ? அலுவலகத்தில் சாதி பார்த்து சேர்ந்தீர்களா ?
உங்களை எல்லாம் எப்படி மனிதர்களா பாக்க முடியும் ? முதல் வகுப்பில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று கத்தி கத்தி படிக்க சொல்லித் தந்த நீங்க தான் , வேற சாதி பையன காதலித்த ஒரே காரணத்திற்காக உங்கள் மகளை கொன்று தின்னிங்க?
அவங்க மட்டும் சாதி வெறி பிடித்த மிருகம் இல்லை. அதைப் பற்றி தெரிந்தும் அவர்களுடன் உறவு பாராட்டி , அவர்களுடன் வர்த்தகம் செய்யும் ஒவ்வொருவரும் அயோக்கியர்களே !!!
சாதி பார்பவர்களுக்கு ஒர் வேண்டுகோள்.
1. உங்கள் மகளின் பிரசவ வலியின் போது உங்கள் சாதி மருத்துவர் வரும் வரை காத்திருக்கவும்.
2 . உங்கள் பொற்றோர் உடல் நலம் குன்றி நடு ரோட்டில் மயங்கி விழுந்தால் , அவர் கழுத்தில் சாதி பெயர் எழுதி அடையாள அட்டை மாட்டவும்.
3 . உங்கள் கழிவறை அடைத்துக் கொண்டவுடன் உங்கள் சாதியில் ஒருவனுக்கு அழைத்து அதை சுத்தம் செய்யச் சொல்லவும்.
4 . இப்போ சாதிக்கு ஒரு கல்லூரி இருக்கு . அதனால உங்கள் மகன்/மகள் campus இன்டர்வியூ ல தேர்வாகும் பொழுது , உங்கள் சாதிக்காரர்கள் தொடங்கிய கம்பனிக்கு மட்டும் வேலைக்கு அனுப்பவும் .
லூசு மாதிரி இப்போ எல்லாரும் தான் சாதி பார்கிறார்கள் அப்படின்னு பேசுனா தயவு செஞ்சு செத்துப் போய் விடுங்கள்.
என் தலைமுறை ஆட்களுக்கு சொல்லிக்கொள்வது,
மனுஷன மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.இந்த மாதிரி திருமணத்தில் மட்டும் இல்லாமல் எங்கு சாதி இருந்தாலும் அதை புறக்கணிக்க வேண்டும்.
இஞ்சினியர் , டாக்டர்ன்னு Facebook ல போடுறது பெருசு இல்லை. படிச்சவங்க மாதிரி நடந்துக்க பழகவும் . இன்னும் சாதிய கட்டி அழுதா உங்கள் மேல் வெறுப்பு மற்றும் அருவருப்பு வருது.
மனிதம் மலரட்டும் .
உங்கள் பண்பு உங்களை அடையாளப்படுத்தும், சாதி வெறி அல்ல.
அன்புடன் ,
அரவிந்த் .

Facebook ல Engineer/ Doctor அப்டிங்கிரது description ல தான் இருக்கும்.. ஆ னா, சாதிய பெயரோடயே சேத்திபோட்டுக்குறாங்க இப்போலாம்..
ReplyDeleteகேட்டா என்னோட பரம்பரை பெயர் , எனது கலாச்சாரப் பெயர்ன்னு கூசாம சொல்லுதுங்க
Delete