கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் புத்தகம் வாங்கினேன். மனுஷன் கொல்றார். ஒவ்வரு கதையும் போட்டு படுத்துது. ஒரு திருமணத்தை இப்படிப்பட்ட கோணத்திலும் பார்க்கலாம் அப்படின்னு சொல்லி... சிறுகதைக்கெல்லாம் reviewஆன்னு பார்க்காதீர்கள். அது மனதில் உண்டாக்கும் இம்பாக்ட் எவ்வளவுன்னு வார்த்தைகளில் வர்ணிக்க முடியல.
ரெண்டு ஜோடி. ஓன்று காதல் திருமணம், இன்னொன்று அரேஞ்சிடு மேரேஜ்.
அவர்களின் அன்யோன்யம் , பிரியத்தை பகிர்ந்து கொள்ளும் தன்மை, வேற்றுமையை மதிக்கும் லாவகம் , புரிதல், ஊடல் , தேடல் , பதினைந்து பக்கங்களில் ஒரு வாழ்வை வாழ்ந்த உணர்வு. திருமணத்தன்று விளையாடிய விளையாட்டு , தன் துணையை நினைவு படுத்தும் வாடை , அவளின் பாதங்களின் மேல் அவன் கொள்ளும் காதல்.
இப்படி எழுதினா ஒரு நாளைக்கு ஒரு சிறுகதை தான் படிக்க முடியும். இன்னும் நானூறு பக்கங்கள் மிச்சமிருக்கு.
கிரா எனக்கு ஒரு போதை. 1966-ல் எழுதிய கதை இன்னுமும் அதே கண்ணீரும் புன்னகையும் வரவழைக்கிறது. ஆந்த கடைசி பத்தி அழுகாம படிக்கணும்னு பார்த்தேன். எங்கத்த !
இவரின் எழுத்துக்களை தயவு கூர்ந்து படிக்கவும்.
அன்புடன்
அரவிந்த்
இந்த கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் இந்த ரெண்டு பேரும் எப்படி தான் கதை எழுதுனாங்களோ!!! மனசு முழுக்க ரணமாயிருது . ஒலகத்திடமிருந்து மறைத்து , மனம் மறந்து விட்டதாக ஏமாற்றிய தருணங்கள் எல்லாத்தையும் வாரி எடுத்து மூஞ்சில பொளேர்ன்னு அறஞ்சிட்டு போகுது !!!
25 வயசுல ஞாபகங்களை மீள் உருவாக்கம் செஞ்சுட்டு இருக்கிறதா யார ஏமாத்திட்டு இருக்கனோ !
எழுத்தாளனாக வாழ்வது வரமா சாபமான்னு தெரியல. ஆனால் வாசகனாக வாழ்வது கொடியது. தமிழ் மொழியில் மட்டுமே சிறுகதைகள் கூட வாசகனை "வச்சு செய்யும்"
#கிரா #அசோகமித்திரன் #சிறுகதைகள் #கையறுநிலை#தவம் #கர்வம்

No comments:
Post a Comment