முன்று கதாபாத்திரங்கள். வடக்கிலிருந்து வரும் முல்லை. அவளின் கல்லூரிக்கால நண்பன் நவீன் , பேராசிரியர் தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீகுமார். இம்மூவரும் இனைந்து கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் சென்ற பாதையில் சென்று சிலப்பதிகாரத்தை பற்றிய குறும்படம் எடுப்பதற்காக செல்கின்றனர்.
சிலப்பதிகாரம் உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு ஸ்ரீகுமாரின் பதில் அல்டிமேட். கோவலனின் பெயர்க்காரணம் , கண்ணகியின் வரலாற்றுப் பின்பம் , சமண முனிவர்களின் வரலாற்றுப் பங்கு , பெரியாரின் பார்வை , எனக்கு தெரிந்த வரை நேரடி அரசியலை அப்பட்டமாக போட்டு உடைக்கும் ஆசிரியர், கெத்து சார் நீங்க.
அரசியலும் புராணமும் மட்டும் பேசவில்லை, ஸ்ரீகுமார் கடத்தப்பட்ட இடத்தில் துவங்குகிறது இன்றைய பொருளாதார அரசியல். கொங்குச் சமவெளிக்கும், கண்ணகியின் கால் சிலம்பிற்கும் என்ன சம்பந்தம் ? ரோமானிய பரிசுப் பொருளுக்கும் குஜராத் கூலித் தொழிலாளிக்கும் இருக்கும் சம்பந்தம் தான்.
ஆளுமை - இந்நூலில் வரும் உரையாடல் ஒன்றுகூட 'அறிவுஜீவி' ஸ்டைல் இல்லை. நீங்களும் நானும் தேனீர் பருகும் உரையாடலே. ஆனால் கதாபாத்திரம் அதன் தன்மையால் அது வரலாறாகவும், சிலப்பதிகாரமாவும் , மார்க்ஸ் , லெனின் , இரத்தினக்கல் வியாபாரம் , தங்கம் இறக்குமதி , இன்னும் நிறையா இருக்கு.
கல் தேடி திரியும் ஊர்ப் பெரியவர் (பெயர் சொன்னா சாதி கலவரமே வரும்) .
அரசியல் , தொழில், கடத்தல் , இயற்கை வளங்களைச் சுரண்டுதல், நம் வரலாறு என்று நம் தலையிலே மிளகாய் அரைத்தல் , அப்படியே அள்ளுது.
கொஞ்கம் கனமான புத்தகம் . பங்கங்களில் அல்ல, கருத்தின் ஆழத்தால். திராவிட அரசியல் , சாதி அரசியல் , மதங்களின் தேவை , என பல விஷயங்கள்.
எனக்கு இருக்கும் அரசியல் புரிதல் கம்மிதான். அதை வைத்து பார்க்கும் பொழுது இப்புதினம் சமகாலத்தின் பொக்கிஷம்.
ஆங்கிலத்தின் டாவின்சி கோட் , தி லாஸ்ட் சிம்பல் போன்ற நூல்களிலிருந்து சற்றும் குறைந்ததில்லை.
சற்றே டவுட்டு : பெருமாள் முருகனின் "மாதொருபாகனுக்கு" அவ்வளோ சீன் போட்டவங்க இந்த புத்தகத்தின் அரசியல் பற்றி ஒன்றுமே கூறவில்லையே ? ஒரு வேளை புரியலையோ!!!!
அனைவரும் கற்க வேண்டிய விஷயம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஆகச் சிறந்த புத்தகம் படித்த மனநிறைவு.
அடுத்த புத்தகம் : முகிலினி அதுவும் நம்ம இரா.முருகவேள் புத்தகம்தான்.
அன்புடன் ,
அரவிந்த்

No comments:
Post a Comment