Thursday, September 14, 2017

கல்யாண அலப்பறைகள்/பரிதாபங்கள்

இப்ப பாத்துக்கிட்டீங்கனா இந்த ப்ரி வெட்டிங் போட்டோ சூட் , போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் அப்படின்னு இரு அலப்பறைகள் உள்ளன. இந்த கண்றாவி பெரும்பாலும் அரேஞ்ட் மேரேஜ்-லதான் நடக்கும்.லவ் பன்றவனுக்கு கல்யாணம் நடந்தாலே பெருசு அவன் எங்கத்த இதெல்லாம் பண்ண ?

 மொதல்ல நம்ம இந்த பையனும் பொண்ணும் எப்படி "மேட் பார் ஈச் அதர்" ஆனாங்கன்னு ஒரு புலனாய்வு பனண்ணுவோம்.
அவங்க சொந்த சாதிக்குன்னே ( மத்தவன் எல்லாம் வாடகைக்கா வெச்சுருக்கான்?) இருக்கிற இணையதளத்தில் அல்லது ஒரு புரோக்கரிடம் அவர்களது ஜாதகம் , கல்வி , சம்பளம், தோசம் இன்ன பிற சமாச்சாரங்கள் கொடுக்கப்படும். இதைப் போலவே எதிர்த்தரப்பினரும் கொடுத்து வைத்து இருப்பார்கள்.

மணப்பெண் வீட்டில் நடக்கும் உரையாடல்.
பெண் : ஆளு பாக்க பெரிய காண்டா மிருகம் மாதிரி இருக்கான் .
அம்மா : உங்க அப்பா கல்யாணத்தப்போ இதைவிட கேவலமா இருந்தாரு.
பெண் : என்னோட ப்ரெண்ட்ஸ் இவர பிடிக்கலைன்னு சொல்றாங்க .
அம்மா : அவங்களுக்கு எதுக்கு புடிக்கனும்? மொதல்ல எப்ப பார்த்தாலும் இந்த அம்பள பசங்களோட போட்டோ எடுத்து அத பேஸ்புக் , வாட்ஸ்ஆப் எல்லாத்துலயும் போடுறத நிறுத்து.
பெண்: அம்மா தட் இஸ் மை ப்ரீடம். எனக்கு இந்த பையன் வேண்டாம்.
அம்மா : நம்ம ஆளுங்கள்ல இவன் மட்டும் தான் அமெரிக்கால இருக்கான், இத்தனை லட்சம் சம்பளம் வாங்குறான் , கம்மியான பவுனுல உன்னை கட்டிறேன்னு சொல்றான்.
The conversation goes on likes this and the girl agrees finally and breaks up with her current boyfriend .

பையன் வீட்டு சீன் .
அம்மா : டேய் நேத்து பாத்த பொண்ணு ....
மகன் : எனக்கு டபுள் ஓகே மம்மி.
அம்மா : அலையாதடா ..
அப்பா : ஒருதடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சு பாத்து முடிவு பண்ணு . பொண்ணு உங்க அம்மா மாதிரி இருந்தா அந்த ஆணடவனால கூட உன்னைக் காப்பாத்த முடியாது மை சன்.

ஆக ஒரு வழியா கம்மியான வரதட்சணை குடுத்தா போதும்ன்னு பொண்ணும், என் மூஞ்சிக்கு பொண்ணு கிடைக்கிறதே பெருசுங்கற மைண்ட் செட்ல தான் இந்த கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கும். அவங்க சாதியிலேயே கல்யாணம் பன்றது என்னமோ மவுன்ட் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த சாதனைக்கு நிகரானது என்று ஒரு குரூப் அலஞ்சிட்டு இருக்கும்.

பட் இந்த பேஸ்புக் அப்டேட்ஸ் எல்லாம் பாத்தா என்னம்மோ ரோமியோ ஜுலியட் மாதிரியும் ஒலகத்துலயே இவிங்கலுக்கு மட்டும்தான் கல்யாணம் ஆன மாதிரியும் ஒரு பில்டப்பு.
அப்படிபட்ட ஆன்லைன் அலப்பறைகளுக்கு ஒரு சின்ன செய்தி .
1. உங்கள் பெற்றொர் அவர்களின் சொத்து மதிப்பை உலகிற்கு காட்டவே இதை செய்கிறார்கள் .
2. உங்கள் உடன் பிறந்தோர் அவர்களுக்கான துணை தேடலில் மூழ்கி விட்டனர்.
3. நல்ல நண்பர்கள் இருந்தால் அவர்கள் உங்களை இது போன்ற பதிவினை பொதுவெளியில் பதிவேற்றம் செய்ய விடமாட்டார்கள்.

சோ , பேசிக்கலி பீப்பிள் ஆர் லாபிங் பிகைண்டு யுவர் பேக்கு.
போட்டோ வே போட கூடாதா ? எங்கள் சந்தோஷம் நாங்கள் என்ன வேணும்னாலும் பண்ணுவோம் என்று பதில் கூறும் முன் , கழுத போடுங்க. எங்களுக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணும்ல. என்னவோ பண்ணித் தொலைங்க பட் அந்த Quotes லைக் "ஒன் ட்ரூ லவ்" ,"லவ் ஆப் மை லைப்" .. இந்த மாதிரி  எல்லாம் வேணாம். ஏற்கனவே ஜிமிக்கி கம்மல் , விவேகம் Vs மெர்சல் , அளுங்கட்சி காமெடி ,  அதைவிட பெரிய காமெடி எதிர்கட்சி , சம்மந்தமே இல்லாம கிரிக்கெட் மேட்சுல போய் "வி ஆர் ஓவியா ஆர்மி"ன்னு பேனர் வைக்கிறது , இந்த மாதிரி எவ்வளவுதான் நாங்களும் பாக்குறது ?


அனிதா நீ செத்துப் போனது எவனையும் மாத்தல. சும்மா ரெண்டு போஸ்ட் , நாலு வீடியோ .. அவ்வளவுதான் ..
டெல்லியில் மனித மலத்தை உண்டு போராட்டம் நடத்திய விவசாயிகளே... சார் நாங்களே இங்க தமிழ் ராக்கர்ஸ் அட்மின அரஸ்ட் பண்ணிட்டாங்கன்னு மன வேதனையில் இருக்கோம் இப்ப போயி காமெடி பண்ணிக்கிட்டு !!!
எத்தனை தடைகள் வந்தாலும் நீட்டினை எதிர்த்தும் டாக்டர் அனிதாவின் கொலையை கண்டித்தும் வகுப்புகளைப் புறக்கணித்து வெயில் மழை பாராது, எத்துயர் வரினும் கொண்ட நோக்கில் மாற்றில்லை பிடித்த கொள்கையில் தோற்பதில்லைன்னு போராடும் மாணவச் செல்வங்களே, நாங்க சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கட் கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் தொலைக்காட்சியில் பேசியதை எத்தனை பேர் கண்டீர் ?

ஏன்டா கல்யாண பரிதாபங்கள்ன்னு டைட்டில் வெச்சுட்டு அரசியல் பேசுறன்னு கேக்கறீங்களா ?
வெக்கமே இல்லாம இவங்க வெட்டிங் போஸ்டுல என்னவோ ஆண்அழகனும் உலக அழகியும் இனைந்ததாக (ஆக்சுவலி உண்மையான வார்த்தைகள் இன்னும் கேவலமாக உள்ளது)  போடுறதுக்கு மட்டும் லைக்கு , லவ் ரியாக்ஷன்,  மேட் பார் ஈச் அதர்ன்னு வாய் கூசாம சொல்றீங்கல்ல ?  அப்ப நானும் இப்படிதான் எழுதுவேன்.
ஆற்றாமையுடன்,
அரவிந்த் 

2 comments:

  1. ஆற்றாமை நன்று ஆனால் இங்கே பேசிய அரசியல் அடாவடித்தனம்

    ReplyDelete
  2. அடாவடித்தனமான்னு தெரியலை அனா நிதர்சனம்

    ReplyDelete