ஆஹ... இப்பல்லாம் யாரைக் கேட்டாலும் "ஐ ஏம் எ ரைட்டர், யூ நோ?" அப்படின்னு சுத்தீட்டு இருக்காங்க இந்த ஆங்கில எழுத்தாளர் ஆர்வக் கோளாறுகளைக் கூட மன்னிச்சு விட்டுடலாம் , தமிழ் எழுத்தாளர்கள் பல வகைப்படுவார்கள். அவர்களைப் பற்றி கீழ் கண்ட கட்டுரையில் காண்போம் !
களவாடிய பொழுதுகள் :
சமூகத்தில் மிகவும் உயர் பதவியில் பணிபுரியும் அன்பர் அவர் (அப்படின்னு அவரே ஒவ்வொரு முறையும் கூறுவார்). அவர் தனது பணியில் சந்திக்கும் சவால்களையும் சாகசங்களையும் கூறும் பொழுது தீரன் திரைப்படம், இந்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் இதெல்லாம் கண்முன் வந்துபோகும்.பட் அவரின் எழுத்துக்கள் அனைத்துமே சுட்டவை. அவரின் காலவரிசையில்(டைம் லைன்) சென்று பார்த்தால் அவ்வளவு நகையும் அன்பும் இணைந்து பிணையப்பட்ட எழுத்துக்கள் நம்மை வரவேற்கும். அந்த வார ஆனந்த் விகடனில் வரும் . அவ்வளவே ! (வித் ஒரிஜினல் ரைட்டர் நேமு).
காதல் கவிதைகள் (கண்றாவி) :
பதினாறு வயதில் எழுதிய காதல் கவிதைகள் மொக்கையாக இருக்கும். தப்பில்லை. ஆனால் அதையே அறுபது வயதிலும் எழுதினால் ? அதற்கு இருநூறு பேர் ஆஹா ஓஹோன்னு பில்டப் கொடுத்தா ? அப்படித்தான் இன்னிக்கு பல கவிதைகள் ஓடுது. கண்ணதாசன், கவிக்கோ அப்துல் ரகுமான் , கல்யாண்ஜி , இன்னும் எத்தனை கவிஞர்கள் கர்வமாக வலம்வந்த இடம். இன்னிக்கு இப்படி ஆயிடுச்சு. (எ.கா)
சாதியம் :
ஆகப் பெரும் துயர் இதுதான். எழுத்து எனும் வல்லமையால் தன் சாதியப் பெருமை பாடுகின்றனர். இதில் ஆங்கிலம் தமிழ் வேறுபாடுகள் இல்லை. இந்தியாவில் வெளிவரும் 99 சதவிகித புத்தகம் சாதி சார்ந்தோ அல்லது சாதியை மையப்படுத்தி மட்டுமே உள்ளது. அதுவும் சாதிய கோட்பாடுகள் தப்புன்னு சொல்ற மாதிரி இருந்தா பரவாயில்லை , பட் ஆண்ட பரம்பரை என்று உடான்ஸ் விடுவதும் , இறைவனின் வழித் தோன்றல் எங்க பெரியப்பா என்கிற அளவில் உள்ளது. இதுக்கு எடுத்துக் காட்டாக பல போட்டோஃ போடலாம் பட் நானும் அவர்களுள் ஒருவனாக விருப்பம்மில்லை .
இலக்கியம் :
தமிழில் இலக்கிய நூல்கள் யாவைன்னு யாராவது ஒரு லிஸ்ட் போட்டா தேவலை. இவனுங்க படிக்கிற வாயிழ நொழையாத பெயர் கொண்ட , யாருமே படிக்க முடியாத மாதிரி புத்தகம் மட்டுமே இலக்கியம்ன்னு ஒரு குரூப் சுத்திகிட்டு இருக்கு .
நம்ம எழுத்துக்கள் அனைத்தையும், எழுத்தாகவும் கருத்துக்களாகவும் பார்ப்பதே இல்லை .அதை எழுதிய நபர் யார் அவரது பின்புலம் என்ன சாதி என்ன என்று அனைத்தையும் தோண்டி , அந்த சாதிக்காரன் எழுதுனா அவன் நம்மல கேவலமா மட்டுமே எழுதுவான் என்று புத்தகம் வெளிவரும் முன்பே போர்க்கொடி தூக்குகிறோம்.
சமூக வலைதளங்களில் எழுதுவது என்பது ஆகச் சிறந்த படைப்பாக அமையாது .சென்ற ஆண்டு எழுதியதை அந்த எழுத்தாளரே மறந்து விடுவார், அதைப்படித்த நாம் எங்கே அதை நினைவில் கொள்வது ? புத்தகத்திற்கு மாற்று சமூக வலைதளம் அல்ல. எத்துனை தலைமுறை தாண்டியும் புத்தகம் நம்மை செம்மைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
எழுத்து என்பது வாழ்வு எனக் கொண்டால் வாசிப்பு என்பது சுவாசம் . ஆகச் சிறந்த எழுத்தாளர் அகச் சிறந்த வாசகனாக இருத்தல் அவசியம். நல்ல எழுத்து வாசகனின் பண்பை மேம்படுத்தும் , அவனது மனதை திடப்படுத்தும் , அவனை வாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். ஒருபோதும் அவனை சிறுமைப் படுத்தாது, பிறர் துன்பத்தைக் கூறி அவனை நகை செய்யாது .
எழுத்து தவம்.
வாசிப்பு அதற்கான பயிற்சி.
நல்ல தமிழ் எழுதுவோம் .
அன்புடன் ,
அரவிந்த்

No comments:
Post a Comment