Saturday, July 8, 2017

2 மேஜைக்கரண்டி அன்பு

இப்போலாம் கொஞ்சம் அன்பா இருந்தா நடிகன் அப்படின்ற அடையாளத்தை தந்துடுறாங்க. மக்கள் , வாழ்க்கை முறைகளை மாற்றும் பொழுது அப்படியே மனசையும் detach பண்ணிக் கொள்கிறார்கள்.

யோசிச்சுப் பார்த்தா கடைசியா அப்படிப்பட்ட அன்பை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்து போன தருணங்கள் மிகக் குறைவு.

வழியனுப்ப யாரும் இல்லாத ஒரு ரயில் பயணம் தொடங்கும் முன் சட்டுன்னு ஜன்னல் பக்கத்தில் முளைத்த ஒரு சிறுமியின் புன்னகை.

தன் திருமணத்திற்கு பிறகு அதிகம் பேசாத ஒரு தோழி வேறு ஒரு நிகழ்வில் நம்ம கையைப் பிடித்து "ரொம்ப நன்றி டா . சொல்லக்கூடாது, ஆனாலும் மனசு முழுக்க சந்தோஷம்" என்று கூறி கடந்து போகும் ஒரு தருணம்.

கல்லூரி படிக்கும் பொழுது ஒரு விபத்து ,  கைப்பேசி உடைந்து , கை , கால் எல்லாம் சிராய்ப்பு , பெயர் தெரியாத ஒரு நண்பர் மருத்துவமனையில் என்னோடு எனக்காக இருந்தது.

புத்தகத்திற்காக ஆராய்ச்சி செய்த பொழுது அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் என் கையை பற்றி கண்களில் நீர்த்துளியுடன் "எனக்கும் அவன ரொம்ப புடிக்கும் டா" என்று stage 4 கேன்சருடன் போராடிய தோழியாய் இருந்து தாயாய் மாரிய அர்ச்சனா கூறிய பொழுது.

ஏதோ கோவத்தில் யாருடனும் பேசாமல் இருக்கும் போது இரவு வீடு திரும்பி விட்டோமான்னு பாக்க இருபது போன் பண்ணி, "செத்துட்டியா" என்று கேட்கும் நண்பர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று அழைத்து இல்லாத தங்கையாக மாறிய நண்பனின் காதலி.

சிறு குழந்தையின் அனைப்பு
அம்மாவின் திட்டு
அப்பாவின் சிரிப்பு
காதலியின் முத்தம்
மனைவியின் கோபம்

யாரென்று தெரியாமல் ஒற்றைப் பயணத்தில் உற்ற உறவாக மாறிய நண்பர்கள்.

மனசு முழுவதும் பாரமாக இருக்கும் பொழுது, கடவுளாக மாறும் ஒற்றைப்பாடல்.

ரொம்ப நல்லவர்களாக மாற வேண்டாம்.
அடலீஸ்ட் BIGG BOSS கண்டஸ்டன்ட்ஸ் மாதிரி வாழ வேண்டாமே !

வாழ்கையை ஒரு ரெண்டு மேஜைக்கரண்டி அன்பு போட்டு சமைப்போம்.
அன்புடன்,
அரவிந்த் . 

1 comment:

  1. மன நெகிழ்வான பதிவு அரவிந்த்

    ReplyDelete