பலர் வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை" என்கிற படத்தைப் பார்த்திருக்கக்கூடும். நான் இப்புத்தகத்தை படிப்பதற்காகவே அப்படத்தை பார்க்க வில்லை. ஆதலால் இப்பதிவு "லாக்கப்" என்ற புத்தகத்தைப் பற்றியது மட்டுமே.
ஒரு நூற்றி ஐம்பது பக்கம் கொண்ட புத்தகம் உங்களை எந்த அளவு பாதிக்கும் ?
கதைக்களம் : ஆந்திர மாநிலம் , தெலுங்கு தெரியாத இருவர் . அரைகுறை தெலுங்கு தெரிந்த இருவர். நால்வரும் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக வந்தவர்கள் . ஓர் அதிகாலை வேளையில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
விசாரணை என்பது லத்தியால் அடிப்பது என்ற ஒற்றை விஷயம் மட்டுமே .
பத்திற்குப் பத்து அறையில் ஒரு சிறை. வியர்வை வாடை, அறையின் ஓரத்தில் மூத்திரம் பெய்தல், உடலின் உள்ளே எலும்பு உடைந்து குத்தும் வலி, அடிபட்ட இடம் சீழ் பிடித்து அழுகும் அவலம் , சாமானிய மனிதனின் பயம் , அவனது பாதுகாப்பற்ற உணர்வு , அவன் மேல் திணிக்கப்படும் அதிகாரம் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேல் கேள்வி எழ வைக்கிறது இப்படைப்பு.
நம் தமிழகத்தில் காவலர்களை கதாநாயகனாக கொண்டாடும் மனப்பாங்கினை சினிமாவின் தயவால் பெற்றோம். நிஜ வாழ்வில் ஓர் நடுத்தர வர்கத்தின் சாமானிய பிரஜை காவல்துறை அதிகாரிகளிடம் கொண்ட பரிச்சயம் வேறாக இருக்கிறது . போக்குவரத்து காவலரிடம் கொடுக்கும் கையூட்டு, கடவுச்சீட்டிற்காக விசாரணை செய்யவரும் காவலரிடம் கொடுக்கும் கையூட்டு , புகார் கொடுக்கச் செல்லும் போது கொடுக்கும் கையூட்டு என்று என்றுமே காவலர்களிடம் பயம் மட்டுமே உள்ளது . இம்மியளவும் மரியாதை இல்லை.
நூறு குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதே அரசியலமைப்புச் சட்டம். பட் நம்ம ஆளுக கரெக்டா நூறு குற்றவாளிகளிடம் காசு வாங்கி (இதை வேற வார்த்தையில் தான் சொல்லனும்) தப்பிக்க விட்டுடுங்க . இளிச்சவாயன் எவனாவது புடிச்சி உள்ளே போடுங்க.
( What the hell are You talking ? They are our primary protectors ன்னு சொல்றவங்க எல்லாம் கொஞ்சம் shut up பண்ணுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாள் , கதிராமங்களத்தின் ஒடுக்குமுறை , பியுஷ் மனுஷோட பேட்டி , இன்னும் எவ்வளவு இருக்கு ) .
நல்ல போலீசே இல்லையா ? இருக்காங்க . Ratio ரெம்ப கம்மி .
இன்னும் படம் பாக்கல . ஆனா வெற்றிமாறன் பரம ரசிகனா மாறிட்டேன். நம்ம ஊரு சினிமா எல்லாம் காக்க காக்க அன்புச்செல்வன் , வேட்டையாடு விளையாடு ராகவன் அப்படி போயிட்டு இருந்தப்ப ஒரு சாமானியன் இலக்கியத்தை உலக மேடைக்கு கொண்டு சென்றமைக்காக.
புத்தகத்தை படித்துப்பாருங்கள் . மனம் கனத்துப் போகும்.
ஒருத்தரோட வாழ்கைக்கு நான் யாரு மதிப்பெண் குடுக்க ?
அன்புடன் ,
Arvi

No comments:
Post a Comment