Saturday, August 26, 2017

அப்பாவின்சினேகிதர் -அசோகமித்திரன். புத்தகவிமர்சனம்.




இது ஒரு சிறுகதைத் தொகுப்பு, குறுநாவல்கள் அப்படின்னு கலந்து கட்டும் புத்தகம். 

கதைக்களம் எல்லாமே சென்னை , ஐதராபாத் , செகந்திராபாத். கிராமியச் சிறுகதைகள் இல்லை. நடுத்தர வர்கத்திற்க்கும் சற்று குறைவான வசதி படைத்த நகர வாசிகளே கதைமாந்தர்கள். காலம் இந்திய சுதந்திரத்திற்கு சற்று முன். 
கதாபாத்திரம் அனைத்தும் ஏதோ ஓர் வகையில் நாம் அறிந்தவர்கள் இல்லைநாம் கடந்து சென்ற நபர்கள். சிலவற்றில் நமது பின்பத்தைக் காண்போம். ஒவ்வொரு கதையும் முத்துமணி மாலையில் உள்ள முத்து போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகள்.
 கிரா-வைப்போல் மனதை நெகிழ வைக்காமல் , வாழ்ந்த அனுபவத்தை நம் மனதிற்குள் புகுத்தி விடுகிறார்.
அன்பு , மன்னிப்பு , கோபம் , கையறுநிலை, நட்பு , காதல் , தித்திக்கும் கண்ணீர் , இதயத்தை இறுக வைக்கும் புன்னகைத் தருணம் , இன்னும் பல.
கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். 

ஒவ்வரு கதையை தனித்தனியாக விமர்சனம் செய்தால் வளவளா கொழகொழாவாக ஆகிவிடும். 

மனதை துளைத்து , உணர்வுக்கடலில் தள்ளி, நினைவலைகளில் நீநதச் செய்து, கரைகடக்கும் பொழுது வேறோர் நபராக மாற வைத்த அற்புதம்.
அன்புடன்,
அரவிந்த்

No comments:

Post a Comment