நம்ம தான் வேலல இல்லாமல் இந்த Facebook , Twitter , Instagram , இப்படிப்பட்ட சோஷியல் நெட்வொர்க்கிங் பேஜஸ் எல்லாத்துலயும் அக்கவுண்ட் கிரியேட் பண்ணா ; இந்த ஆன் சைட் போகிற மக்கள் எல்லோரும் விசா எடுத்த உடனே மேற்கூறிய வெப்சைட்டில் அக்கவுண்ட் கிரியேட் பண்ணிடறாங்க . அடுத்து பாத்துகிட்டா இப் தி யூசர் இஸ் எ கேர்ள், அவங்க வாங்கும் புது துணி மொதக்கொண்டு ஷேர் பண்ணா மட்டும் தான் போர்டிங் பாஸ் தருவாங்க அப்படின்ற ரேஞ்சுக்கு ஃபோட்டோ ஷேர் பண்ணிட்டு இருப்பாங்க. (வாட்ஸ் அப் ஸ்டேடஸ் இதில் அடங்காது ) .
நம்ம பயலுக்கு ஏரோபிளேன்ல சாப்பாடும் , சரக்கும் ஃப்ரீயா தருவாங்க அதுவும் குட்டைப் பாவாடை போட்ட ஒரு பதுமை மேற்கூறிய உணவைத் தரும் அப்படிங்கற செய்தி அவனை சொர்கத்திற்கே அழைத்துச் செல்லும் .
நெக்ஸ்ட் பார்ட்டு send off . நம்ம பயல சென்டு ஆஃப் பண்ண நம்ம தீரன் படத்துல வர்ற வில்லன் கணக்கா ஒரு ஏழு பேர் வந்து , அவங்க மொகரை எல்லாம் ஏதோ மிஸ் வோர்ல்டு ல தோத்துப் போன பொண்ணு மாதிரி வெச்சிட்டு போட்டோ போடுவாங்க . அந்த குரூப்ல உள்ள அத்தனை பேரும் அந்த பயல அன்னிக்கே மறந்துடுவாங்க என்பதே உலக வழக்கம்.
இப்ப தி கேர்ள் இஸ் கோயிங் அப்ராடுன்னு வைங்க , அந்த பிள்ளையோட அப்பா அம்மா தம்பி தங்கை தாத்தா பாட்டி ஏழு தலைமுறைக்கு முந்திய சொந்தம் சகிதம் வந்து ஏர்போர்ட் அப்படியே பொருட்காட்சி மாதிரி ஆக்கிடுவாங்க. அடுத்து பாத்துகிட்டா அங்க போயி எறங்குனதில் இருந்து taxi , road , pavemet , hotel , room , restroom அப்படின்னு ஓர வஞ்சனை இல்லாமல் தெறிக்கும்.
ஆனா பாருங்க நம்ம ஊர்ல இருக்கிற வரைக்கும் ஒன் வே ல ஆப்போசிட் சைடுல போவோம் , சிக்னல் ல ஹார்ன் அடிப்போம் , கோவில் தூண்களில் எண்ணெய் தடவுவோம் , இன்னும் என்னென்னலாமோ பண்ணுவோம். பட் சேம் பர்சன் கோயிங் டு தி அப்ராட் குடுக்குற அலப்பறை இருக்கே, பொறந்ததுல இருந்தே Halloween ; Thanksgiving , ஜுலை 4th , இப்படிப்பட்ட பண்டிகைகள் எல்லாம் கொண்டாடுன மாதிரி hashtags ஆ போட்டுத் தள்ளுறது.
இத கூட மன்னிச்சிடலாம் , பட் இந்த snowfall க்கு குடுப்பாய்ங்களே ஒரு பில்டப்பு !!!!
அடுத்து அங்க போயி தீவாளி (தீபாவளி தான் but when you are an Indian in abroad you always refer it as தீவாலி/ திவாலி/ தீவாளி) கொண்டாடுவது. சரி பட்டாசு வெடிச்சியாடான்னா , ஏர் பொல்யூஷன் , பலகாரம் செஞ்சியானா , நோடா ஹேட் டார்க் சாக்லெட் அப்படின்னு சிரிச்சுட்டு சொல்லுவாங்க. சரி சந்தோஷம் வெளி நாடு போயிட்டீங்க அதுக்காக வார்த்தைக்கு வார்த்தை அந்த நாட்டின் சிறப்பும் , அதன் பெருமை மட்டுமே வேணாம் please .
என்னைக் கவர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் momentsகளில் சில :
1. சவூதி அரேபியா (ஜெத்தா) துறைமுகத்தில் போர் மேனாக வேலை பார்த்து ஆறு வருடங்கள் ஊருக்கு வராமல் பெண் கல்யாணத்துக்கு பணம் சேர்க்கும் குணா அண்ணன் பிறந்த நாள் அன்று கப்பலில் இருந்த pizza பிரட்டை எடுத்து கேக்காக வெட்டி நள்ளிரவு கொண்டாட்டத்தில் அண்ணன் வாய் விட்டு அழுதது.
2. ரோட்டர்டேம் துறைமுகத்தில் காண்ட்ராக்ட் முடிந்து தன் திருமணத்திற்கு வீடு திரும்பும் ஜஸ்டினுடன் நாள் முழுக்க கடையில் அலைந்து ரோஸ் கலர் ஸ்வெட்டர் வாங்கி அதை பொம்மை மீது வைத்துப் பார்த்து "அவளுக்கு நல்லா இருக்கும் டா அரவிந்தா" என்று சொல்லி பொம்மையை கொஞ்சிய தருணம்.
3. ஹம்ரியா துறைமுகத்தில் தூத்துக்குடி சேர்ந்த ஓர் இள வயது வாலிபன் செல் போனில் "யம்மா நான் நல்லாஆஆஆ இருக்கேன் மா" என்று கத்தி பேலன்ஸ் தீர்ந்ததும் வாயைப் பொத்தி சிறு பிள்ளையாக தேம்பியது.
எல்லா நாடுகளிலும் பிழைப்பு தேடி அகதி போன்று கோடான கோடி மக்கள். கண்களில் பயமும் மிரட்சியும் அப்பிக் கிடக்க , மனது முழுக்க வலியுடன் அம்மாவுக்கோ, மனைவிக்கோ , சகோதரிக்கோ தொலைபேசியில் அழைக்கும் பொழுது "சாப்டியா?" என்ற கேள்விக்கு அடுத்த கேள்வி "இப்ப அங்க மணி என்ன?" .
பதில் கூறும் முன் உதட்டோரத்தில் அரும்பும் புன்னகைக்கு எது கொடுத்தாலும் ஈடாகாது !!!!
அவர்களின் வாழ்வு வளமாக பிராத்தனைகள்.
அன்புடன் ,
அரவிந்த்.

Balance evlo irundhaalum nee enaku(m) call panninandhu!
ReplyDeleteIvanuku ellam (Namakum dhan) girl friend eh amaiyaadhu nu ninaithu konda tharunam.
He he he. Semma . Those good old days . Ipolam std panrathukke vali illai
DeleteAnubhavamum rasanaiyum pramadham!
ReplyDelete